தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறையில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - jail deceased

பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயிரிழந்த முத்துமனோவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

cm-mk-stalin
cm-mk-stalin

By

Published : Jul 1, 2021, 7:35 PM IST

சென்னை:இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்த முத்துமனோ (27) என்பவர், ஏப்ரல் 22ஆம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயிரிழந்தார்.

அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன். அத்துடன், அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

இச்சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை சிறைச்சாலைப் பணியாளர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கானது, குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு (சிபிசிஐடி) மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணை முடிவின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பாளையங்கோட்டை சிறையிலிருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம்

ABOUT THE AUTHOR

...view details