இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா சூழ்நிலையை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கருணை உள்ளத்துடன் பலரும் நிதி உதவியை வழங்கி வருகிறார்கள்.
என்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, பொன்னாடைகளைத் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலருக்கு மிகப் பெரிய அளவில் வரவேற்புகள் தரப்பட்டுள்ளன.