தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாணவி அனுப்பிய கடிதம்; போன் அடித்த முதலமைச்சர் - பள்ளிகள் திறப்புட

ஒசூர் மாணவி ஒருவர் பள்ளிகளை திறக்கக் கோரி முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய நிலையில், அம்மாணவியை தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்புகொண்டு பேசினார்.

ஃபோன் அடித்த முதலமைச்சர், ஸ்டாலின், stalin with phone
ஃபோன் அடித்த முதலமைச்சர்

By

Published : Oct 15, 2021, 4:59 PM IST

சென்னை:கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் டைட்டன் டவின்ஷிப்பை சேர்ந்த ரவிராஜன் - உதயகுமாரி ஆகியோரின் மகள் பிரஜ்னா. ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியான பிரஜ்னா, பள்ளிகளைத் திறக்கும்படி கோரிக்கை விடுத்து முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மாணவியின் தொலைபேசி எண்ணிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (அக். 15) தொடர்புகொண்டு பேசினார்.

கவலைப்படாதீர்கள்...

அப்போது, "வரும் நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறக்கும்போது பள்ளிக்குச் செல்லலாம், நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர், ஆசிரியர்கள் கூறுவதைக் கேட்டு தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிந்துகொள்ளுதல் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்" எனத் தெரிவித்ததோடு நன்றாக படிக்க வேண்டும் என்றும் மாணவியை வாழ்த்தினார்.

இதையும் படிங்க: T-23 புலி பிடிபட்டது

ABOUT THE AUTHOR

...view details