சென்னை: தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நான்காவது நாளாக இன்று (ஜூன்.24) நடைபெற்று வருகிறது. முன்னதாக இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்தார்.
அப்போது கூட்டத்தொடரில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பார்கள். ஆளுநர் உரையில் யானையும் இல்லை, மணியோசையும் இல்லை" என்று விமர்சித்தார்.
ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அடக்கப்பட்ட யானைக்கு தான் மணி கட்டுவார்கள், திமுக அடக்க முடியாத யானை. யானைக்கு நான்கு கால்கள்தான் பலம். அதுபோல திமுகவுக்கு சமூக நீதி, மொழிப்பற்று சுய மரியாதை, மாநில உரிமை போன்ற நான்கு கொள்கைகள்தான் பலம்" என்று பதிலளித்தார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை தொடர்ந்து முதலமைச்சர், கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு போஸ்ட் கோவிட் கிளினிக் வசதி, வட மாவட்டங்களில் புதிதாக தொழிற்சாலைகள், கோயில்களை புனரமைக்கும் புதிய திட்டம் என பல திட்டங்களையும் அறிவித்தார்.
இதையும் படிங்க: ஆளுநரின் உரை ட்ரெய்லர் தான்.. அண்ணாவின் அரசியல் வாரிசு நான்: அதிரடி பேச்சில் அசரடித்த ஸ்டாலின்