சென்னை: உக்ரைன் நாட்டில் உள்ள தமிழ்நாட்டு மாணவர்களை மீட்பது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து உரையாடினார். இந்த உரையாடலில் ஸ்டாலின், உக்ரைன் நாட்டில் உள்ள தமிழ் மாணவர்களுக்கு தேவையான உணவு, இருப்பிட வசதி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் விரைவில் அவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் தொலைபேசியில் வலியுறுத்தல் - உக்ரைனில் இந்தியர்கள்
உக்ரைனில் உள்ள தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உணவு, இருப்பிட வசதி, பாதுகாப்பை உறுதி செய்வதோடு விரைவில் அவர்களை மீட்க நடவடிக்கை வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் வலியுறுத்தியுள்ளார்.
இதற்காக தனி அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களை விரைவாக மீட்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. விரைவில் மாணவர்கள் நாடு திரும்புவர் எனப் பதிலளித்தார். மத்திய அரசு ஆபரேசன் கங்கா என்னும் பெயரில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை விமானங்கள் மூலம் மீட்டுவருகிறது. இதுவரை 5 விமானங்கள் மூலமாக 21 தமிழ்நாடு மாணவர்கள் உள்பட 1,156 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:உக்ரைனில் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் பரிதவிப்பு