தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மீண்டும் கடுமையாகும் கட்டுப்பாடுகள்? ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் நாளை ஆலோசனை!

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஆகஸ்ட் 21) துறைச் சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

cm mk stalin
cm mk stalin

By

Published : Aug 20, 2021, 9:44 AM IST

Updated : Aug 20, 2021, 11:03 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கரோனா தொற்று எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின. மருத்துவ ஆலோசர்களும் ஊரடங்கு தளர்வுகள் குறைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இச்சூழலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மருத்துவக் குழுவினர், உயர் அலுவலர்கள், காவலர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும், கரோனா தொற்று அதிகரிக்கும் மாவட்டங்களில் வார இறுதி நாள்களில் ஊரடங்கு விதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

அத்துடன் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக கரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பது பாதுகாப்பானதா என்பது குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதுவரை தமிழ்நாட்டில் 11 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் கரோனா தொற்றின் மூன்றாம் அலை தொடங்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ள நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்த தகவல்கள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு

Last Updated : Aug 20, 2021, 11:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details