தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கச்சத்தீவு திருவிழாவில் தமிழர்களை அனுமதிக்க முதலமைச்சர் வலியுறுத்தல் - கச்சத்தீவு திருவிழா தமிழர்களுக்கு அனுமதி

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் தமிழர்களை அனுமதிக்கக் கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

cm-mk-stalin-letter-to-external-affairs-minister-jaishankar-on-katchatheevu-antony-church-festival
cm-mk-stalin-letter-to-external-affairs-minister-jaishankar-on-katchatheevu-antony-church-festival

By

Published : Feb 4, 2022, 5:22 PM IST

சென்னை: கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் திருவிழாவில் தமிழர்கள் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் இன்று மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இந்த கடிதத்தில், கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில், அந்தோணியார் பெருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி/மார்ச் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், பங்கேற்க விரும்பும் தமிழ்நாடு மீனவர்களை பாதுகாப்பாக அனுப்ப தேவையான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.

இந்த நிலையில், இந்தாண்டு பல்வேறு காரணங்களை முன்வைத்து தமிழர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் பக்தர்கள் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்துடன் ஆன்மீக மற்றும் உணர்வுபூர்வமான தொடர்பை கொண்டுள்ளனர்.

எனவே இந்த பெருவிழாவில் தமிழ்நாடு மீனவர்கள் தடையின்றி பங்கேற்பதை உறுதி செய்யுமாறு இலங்கை அரசை வலியுறுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இம்முயற்சி இரு நாட்டு மக்களிடையே நல்லுறவைப் பேணுவதை உறுதி செய்யும் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பாக்., சீன விவகாரம்: ராகுலின் குற்றச்சாட்டுக்கு ஜெய்சங்கர் பதிலடி!

ABOUT THE AUTHOR

...view details