தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கருணாநிதி பிறந்தநாள்: முதலமைச்சரின் 7 திட்டங்கள்.. லிஸ்ட் இதோ.. - 2 thousand rupees financial assistance for transgender people

சென்னை: கரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையாக 2,000 ரூபாய் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

முதலமைச்சர் தொடங்கி வைக்கும் திட்டங்களின் லிஸ்ட் இதோ
முதலமைச்சர் தொடங்கி வைக்கும் திட்டங்களின் லிஸ்ட் இதோ

By

Published : Jun 3, 2021, 7:10 AM IST

Updated : Jun 3, 2021, 7:32 AM IST

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார். அதன்படி,

  • கரோனா நிவாரண நிதியுதவியின் இரண்டாவது தவணை 2,000 ரூபாய் வழங்கும் திட்டம்.
  • குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப் பொருள்களை இலவசமாக வழங்கும் திட்டம்.
  • தமிழ்நாடு அரசு அறநிலையத் துறையின் கீழ் 12,959 கோயில்களில் மாதச் சம்பளமின்றி பணிபுரியும் 14 ஆயிரத்திற்கு மேற்பட்ட அர்ச்சகர்கள், பூசாரிகள், பணியாளர்களுக்கு கரோனா நிவாரண உதவியாக 4,000 ரூபாய், 10 கிலோ அரிசி, 13 வகை மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டம்.
  • கரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டம்.
  • கரோனாவால் உயிரிழந்த மருத்துவர், மருத்துவப் பணியாளர், காவலர், நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிதி உதவி.
  • திருநங்கையர் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணிக்க அனுமதி, திருநங்கையருக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம்.
  • மேலும், ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டப் பயனாளிகள் 10 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்
Last Updated : Jun 3, 2021, 7:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details