திராவிட முன்னேற்றக் கழகத்தின் நீண்ட காலம் (50 ஆண்டுகள்) தலைவராக இருந்தவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால் இந்தப் பிறந்தநாளை திமுகவினர் வெகுவிமரிசையாகக் கொண்டாடிவருகின்றனர்.
இன்று காலை சென்னை மெரினா கடற்கரை, அண்ணா அறிவாலயம், முரசொலி அலுவலகம் ஆகிய இடங்களுக்கு சென்று கருணாநிதியின் புகைப்படத்திற்கு மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மெரினா கடற்கரையில் மெரினா தமிழ்நாட்டில் 38 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கிவைத்தார்.