தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பள்ளி சுவர் இடிந்து மூவர் பலி: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்! - திருநெல்வேலி மாவட்டத்தில் பொருட்காட்சி திடல் அருகே உள்ள அரசு உதவிபெறும் பள்ளி

திருநெல்வேலியில் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மூன்று மாணவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சமும், காயமடைந்த நான்கு மாணவர்களுக்கு தலா மூன்று லட்சமும் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி பள்ளி விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பங்களுக்கு ₹10 லட்சம்!
திருநெல்வேலி பள்ளி விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பங்களுக்கு ₹10 லட்சம்!

By

Published : Dec 17, 2021, 3:27 PM IST

சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில் பொருட்காட்சி திடல் அருகே உள்ள அரசு உதவிபெறும் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்பு மீட்புப் படையினர், மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாநகரில் இயங்கிவரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.

இப்பள்ளியில் இன்று காலை 10.50 மணியளவில், பள்ளியில் உள்ள கழிவறைத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி டி. விஸ்வரஞ்சன், கே. அன்பழகன், ஆர். சுதீஷ் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

திருநெல்வேலி பள்ளி விபத்தில் உயிரிழந்த மாணவர்கள்

மேலும், படுகாயம் அடைந்த எம். இசக்கி பிரகாஷ், எஸ். சஞ்சய், ஷேக்கு அபுபக்கர் கித்தானி, அப்துல்லா உள்ளிட்ட நான்கு மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தத் துயரச் சம்பவத்தை அறிந்த, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிகவும் வேதனையுற்று உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா பத்து லட்சம் ரூபாயும், காயமுற்ற நான்கு மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்

இதனிடையே, விபத்து குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் பள்ளி முன் திரண்டதால் பரபரப்பு நிலவியது. அவர்களை காவல் துறையினர் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் செந்தாமரை கண்ணன், உயர் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்கான நடவடிக்கை - பொன்முடி தகவல்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details