சென்னை : தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் மருத்துக் குழு நிபுணர்கள், தலைமை செயலர், வருவாய் அலுவலர்கள், பொதுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கை மேலும் தளர்த்துவது அல்லது நீட்டிப்பது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. மேலும் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
இதையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியுடனான ஆலோசனைக் கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொள்கிறார்.