சென்னை: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் நலன்களுக்காக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வந்த சமூக ஆர்வலர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி மும்பையில் உடல் நலக்குறைவினால் இன்று (ஜூலை 5) காலமானார். அவருக்கு வயது 84.
காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், விசிக தலைவர் திருமாவளவன், சமூக செயற்பாட்டாளரும் குஜராத் மாநில எம்எல்ஏவுமான ஜிக்னேஷ் மேவானி என பல அரசியல் பிரமுகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
முதலமைச்சர் இரங்கல்
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாதிரியார் ஸ்டேன் சுவாமிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்,"பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். ஆழ்ந்த இரங்கல். அடித்தட்டு மக்களுக்காக போராடிய அவருக்கு நேர்ந்த துயரம் இனி எவருக்கும் நிகழக்கூடாது" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஸ்டேன் சுவாமியின் மறைவு - முக்கியப்புள்ளிகள் இரங்கல்