மாவட்டங்களில் வளர்ச்சி பணிகளை தீவிரப்படுத்த ஸ்டாலினின் பக்கா பிளான்!
மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், 16 மாவட்டங்களில் 14 அமைச்சர்களைப் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திட்டங்களை துரிதப்படுத்த 16 மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நியமனம்
By
Published : Oct 20, 2021, 10:02 AM IST
சென்னை:மாவட்டந்தோறும் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகளைக் கண்காணிக்கவும், திட்டங்களை ஒருங்கிணைக்கவும் மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து, மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும் பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும் அமைச்சர்கள் சிலர் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று போன்ற இன்னபிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்வார்கள். அதன்படி, வருவாய் மாவட்ட வாரியாக பின்வரும் அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டம்
பொறுப்பு அமைச்சர்
அமைச்சரின் துறை
சேலம்
கே.என்.நேரு
நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் துறை
தேனி
ஐ.பெரியசாமி
கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் நலத் துறை
திருப்பத்தூர் &
கள்ளக்குறிச்சி
எ.வ. வேலு
பொதுப்பணித் துறை
தர்மபுரி
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
வேளாண்மை உழவர் நலத்துறை
தென்காசி
கே.கே.எஸ்.எஸ்.ஆர் . ராமச்சந்திரன்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
ராமநாதபுரம்
தங்கம் தென்னரசு
தொழில்துறை அமைச்சர்
காஞ்சிபுரம்
தா.மோ. அன்பரசன்
ஊரகத் தொழில் துறை
திருநெல்வேலி
ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன்
போக்குவரத்துத் துறை
திருவாரூர்
சக்கரபாணி
உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை
கோயம்புத்தூர்
செந்தில் பாலாஜி
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
கிருஷ்ணகிரி
ஆர். காந்தி
கைத்தறி மற்றும் துணிநூல் துறை
பெரம்பலூர்
எஸ்.எஸ். சிவசங்கர்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
தஞ்சாவூர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பள்ளிக் கல்வித் துறை
மயிலாடுதுறை &
நாகப்பட்டினம்
வீ . மெய்யநாதன்
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை
மொத்தம் 16 மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக 14 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.