தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

செய்தியாளர்களுக்கு கரோனா ஊக்கத் தொகையாக ரூ.5000: முதலமைச்சர் அறிவிப்பு

cm mk stalin announced covid 19 compensation to journalists
cm mk stalin announced covid 19 compensation to journalists

By

Published : May 26, 2021, 12:27 PM IST

Updated : May 26, 2021, 3:13 PM IST

12:24 May 26

சென்னை: செய்தி நிறுவனங்களில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கு கரோனா ஊக்கத் தொகையாக ரூ.5000 வழங்கப்படும் என்றும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தால் ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரோனா நோய்த் தொற்று காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கிடையே ஊடகவியலாளர்கள் பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் மக்களுக்கு சரியாகக் கொண்டு சேர்ப்பதிலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார்கள்.

மக்களுக்கும், அரசுக்கும் ஒரு இணைப்புப் பாலமாக இக்காலக்கட்டத்தில் சிறப்பாக இயங்கிவரும் இவர்களது பணியினை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், காலமுறை இதழ்கள் ஆகியவற்றில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் (அரசு அங்கீகார அட்டை / மாவட்ட ஆட்சியர் வாயிலாக வழங்கப்பட்ட அடையாள அட்டை / இலவசப் பேருந்துப் பயண அட்டை போன்ற ஏதேனும் ஒரு வகையில் அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்) ஆகியோருக்கு சிறப்பு ஊக்கத் தொகையினை உயர்த்தி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

​கடந்த ஆட்சியின்போது, ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத் தொகை 3 ஆயிரம் ரூபாய் ஆகும். இதனை தற்போது உயர்த்தி வழங்குமாறு வைத்த கோரிக்கையினை பரிசீலித்த முதலமைச்சர், ஊடகவியலாளர்களுக்கான ஊக்கத் தொகையினை ரூபாய் 3 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.

​அதேபோன்று, கடந்த ஆட்சியின்போது பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணிபுரியும் அரசு அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் கரோனா நோய்த் தொற்று காரணமாக இறக்க நேரிட்டால், அவர்களது வாரிசுதாரர்களுக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இதனையும் உயர்த்தி வழங்கக் கோரி ஊடகவியலாளர்கள் சார்பாக அளிக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று, அதனை ரூபாய் 10 லட்சமாக உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

​மேலும், பத்திரிகைத் துறை மற்றும் அனைத்து ஊடகத் துறை நண்பர்களும் இந்த நோய்த் தொற்றுக் காலத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் தங்கள் பணியினை கவனமுடன் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Last Updated : May 26, 2021, 3:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details