தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சுதந்திர தின சமபந்தியில் அமைச்சர்கள் பங்கேற்பு! - முதல்வர் துறை அமைச்சர்கள் பங்கேற்ப்பு

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி கோயில்களில் நடைபெற்ற சமபந்தி நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

எம். ஆர் விஜயபாஸ்கர்

By

Published : Aug 16, 2019, 9:32 AM IST

Updated : Aug 16, 2019, 12:51 PM IST

73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 448 கோயில்களில் சிறப்பு வழிபாடு, சமபந்தி நிகழ்ச்சி நடத்த வேண்டும் என அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர், துணை முதலமைச்சருடன், மற்ற துறை அமைச்சர்களும் அந்தந்த பகுதி கோயில்களில் நடந்த சமபந்தி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் பழனிசாமி கே.கே. நகர் வரசக்தி விநாயகர் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் பங்கேற்றார். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலிலும், சபாநாயகர் தனபால் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலிலும் பங்கேற்றனர்.

சுதந்திர தின சமபந்தியில் அமைச்சர்கள் பங்கேற்பு!

இதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கந்த கோட்டம் கந்தசாமி கோயிலிலும், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு மயிலாப்பூர் முண்டகக்கன்னியம்மன் கோயிலிலும், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர், கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயிலிலும் நடந்த சமபந்தி விருந்தில் பங்கேற்றனர்.

Last Updated : Aug 16, 2019, 12:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details