தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்!

சென்னை: தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவருமாறு உலகின் முன்னணி 5 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

palanisami
palanisami

By

Published : Jun 13, 2020, 2:25 PM IST

உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்களைத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன்படி, நாடுகளுக்கான சிறப்பு அமைவுகளை உருவாக்குதல், வெளிநாட்டுத் தூதுவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்தல், முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்புப் பணிக்குழு அமைத்தல் எனப் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், கேட் ஸ்பேட், பாசில் குழுமங்கள், நைக், அடிடாஸ் ஏஜி, மேட்டல் இங்க் ஆகிய ஐந்து முன்னணி நுகர்வோர் பொருள்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் தலைவர்களைத் தமிழ்நாட்டில் முதலீடு செய்திட நேரிடையாக அழைப்புவிடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும், சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் அவர்களின் தேவைகளுக்கேற்ப ஊக்கச் சலுகைகளை வழங்கிடும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவல் உலக பொருளாதார சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடம் பெயர்ந்திட முடிவெடுத்துள்ளன.

அண்மையில் 15,128 கோடி ரூபாய் முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டன. இது இந்த பேரிடர் காலத்திலும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள தலைசிறந்த இடமாக தமிழ்நாட்டை கருதுவதை எடுத்துக்காட்டுகிறது என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெண்டர் முறைகேடு - முதலமைச்சரை விசாரிக்கக் கோரி திமுக வழக்கு

ABOUT THE AUTHOR

...view details