தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு - மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

cm letter
cm letter

By

Published : Aug 1, 2021, 8:16 AM IST

சென்னை: முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தேசிய மருத்துவ ஆணையத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவில், முதுகலை மருத்துவக் கல்வி விதிமுறைகளுக்கு கடுமையான ஆட்சேபனையை முதலமைச்சர் ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின் கீழுள்ள முதுகலை மருத்துவ சேர்க்கையில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டுமென்றும் வலியுறுத்தியும். தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்குத் தமிழ்நாடு அரசின் எதிர்ப்பைத் தெரிவித்தும், ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு புதிதாக முதுகலை மருத்துவ கல்வி வரைவை அறிமுகம் செய்துள்ளது. இந்த வரைவு நடைமுறைக்கு வந்தால், ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றி முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த முடியாத சூழல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details