தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

போக்குவரத்துக் கழகத்தின் புதிய கட்டங்கள் திறந்துவைப்பு! - EdappadiKPalaniswami

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆறு கோடியே 74 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டுள்ள 10 புதிய கனரக வாகன ஓட்டுநர் பயிற்சித் தளங்கள், பணிமனை ஆகியவற்றை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

இபிஎஸ்
இபிஎஸ்

By

Published : Feb 25, 2021, 9:33 AM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, வேலூர், நாமக்கல், கோயம்புத்தூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ஐந்து கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 புதிய கனரக வாகன ஓட்டுநர் பயிற்சித் தளங்கள், விருதுநகர் மாவட்டத்தில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிமனை ஆகியவற்றைத் திறந்துவைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையில் 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், வேலூரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், அரியலூரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பெரம்பலூரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மதுரை மாவட்டம் மேலூரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 10 புதிய கனரக வாகன ஓட்டுநர் பயிற்சித் தளங்கள் புதிதாகக் கட்டுப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்

விழுப்புரம் லிமிடெட் சார்பில் கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,

சேலம் லிமிடெட் சார்பில் நாமக்கல், ஆதனூரில் 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,

கோயம்புத்தூர் லிமிடெட் சார்பில் கோயம்புத்தூர், பொள்ளாச்சியில் 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,

கும்பகோணம் லிமிடெட் சார்பில் திருச்சியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,

மதுரை லிமிடெட் சார்பில் திண்டுக்கல்லில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,

விருதுநகரில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிமனை என மொத்தம் ஆறு கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் முனைவர் ராஜிவ் ரஞ்சன், போக்குவரத்துத் துறைச் செயலாளர் சி. சமயமூர்த்தி, அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: நரேந்திர மோடி இன்று தமிழ்நாடு வருகை!

ABOUT THE AUTHOR

...view details