சென்னை:எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளி ஒன்றியம், பாப்பாத்திக்காடு கிராமத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியையும், மூலக்காடு கிராமத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளியையும் முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளி ஒன்றியம், பாப்பாத்திக்காடு கிராமத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியையும், மூலக்காடு கிராமத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளியையும் தொடங்கிவைத்தார்.
மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில், 25 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கிடவும், 10 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும் ஆணைகள் வெளியிடப்பட்டன. மேலும் , முதற்கட்டமாக 35 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை, அரசு உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தியும், 40 அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை, அரசு மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தியும் அரசாணைகள் வெளியிடப்பட்டன.
அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளி ஒன்றியம், பாப்பாத்திக்காடு கிராமத்தில் புதிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியையும், மூலக்காடு கிராமத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளியையும் தொடங்கிவைத்தார்.