சென்னை:புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டார்.
பின்னர் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். அதில், “ டெல்லியில் தற்போது அமையவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடம் தனித்துவ அடையாளமாக திகழும். சுதந்திர இந்தியாவில் இது ஒரு நாட்டின் அடையாளச் சின்னமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனிப்பட்ட முறையில் திட்டத்தை வடிவமைப்பதில் முயற்சி எடுத்ததற்காக தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், தன் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.