தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'தலைவராக உருவெடுத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி!' - Minister Sellur Raju

மதுரை: தமிழ்நாட்டில் தலைவர் இல்லையென்று யார் சொன்னது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைவராக உருவெடுத்துவிட்டார் எனக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பெருமையுடன் தெரிவித்தார்.

cm-edappadi-palaniswami-
cm-edappadi-palaniswami-

By

Published : Dec 13, 2020, 2:01 PM IST

மதுரை மாவட்டம் செனாய்நகர் மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்றுவருகிறது. அந்த முகாமில் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று ஆய்வுமேற்கொண்டார்.

அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இளைஞர்கள் அரசியலுக்கு வருவது அரிதாகிவரும் நிலையில், அதிமுகவில் அதிகளவில் இளைஞர்கள் சேர்ந்துவருகின்றனர். மாணவர்கள் மத்தியில் அதிமுகவுக்கு வரவேற்புள்ளது.

அதிமுகவைப் பொறுத்தவரை சட்டத்திற்கு முன்பு எல்லோரும் சமமானவர்களே. யாராக இருந்தாலும் சட்டத்தை மீறக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். உதயநிதிக்கு வந்த கூட்டம் தானாகச் சேர்ந்ததல்ல. காசு கொடுத்து கூட்டப்பட்டது.

தமிழ்நாட்டில் தலைவர் இல்லையென்று யார் சொன்னது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைவராக உருவெடுத்துவிட்டார். மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் முதலமைச்சரைத் தலைவராகவே எண்ணுகிறார்கள். அதிமுக வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆளப்போகிறது.

மாநில அரசு கேட்ட நிதியை, மத்திய அரசு முழுமையாகக் கொடுத்த வரலாறு இல்லை. திமுக ஆட்சிக் காலத்திலும் முழுமையாக மத்திய அரசு நிதி ஒதுக்கியதில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது தீர்மானங்கள் நிறைவேற்றவதும், ஆளுங்கட்சியாக மாறும்போது அவற்றை மறந்து குடும்பத்தை வளர்ப்பதும் திமுகவின் வரலாறு.

மதுரையில் ஜல்லிக்கட்டை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி முதலமைச்சர் முடிவெடுப்பார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'ரஜினி வருகையால் தமிழக அரசியலில் எந்த புதுமையும் நடக்காது' - செல்லூர் ராஜு

ABOUT THE AUTHOR

...view details