தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நிவர் புயல்: 'தமிழ்நாட்டில் நாளை அரசு விடுமுறை' - முதலமைச்சர்

முதலமைச்சர்
முதலமைச்சர்

By

Published : Nov 24, 2020, 3:58 PM IST

Updated : Nov 24, 2020, 8:24 PM IST

20:22 November 24

ஆய்வின் போது

15:56 November 24

சென்னை: நிவர் புயல் காரணமாக தமிழ்நாட்டில் நாளை அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு அரசு சார்பில் சார்பில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை எழிலகத்தில் உள்ள புயல் கட்டுப்பாட்டு மையத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

அவருடன், அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் ஆய்வில் கலந்துகொண்டனர். அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர், "நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் நாளை (நவம்பர் 25) அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. 

அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டுமே பணிபுரிவார்கள். புயல் கரையை கடக்கும் வேளையில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்காகவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் விடுமுறை நீட்டிக்கப்படும். 

மேலும், கடலோர மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தபட்ட அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். 

இதையும் படிங்க:உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் - முதலமைச்சர் வழங்கினார்

Last Updated : Nov 24, 2020, 8:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details