தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரூ.535 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5,503 அடுக்குமாடி குடியிருப்புகளைத் திறந்துவைத்த முதலமைச்சர்!

சென்னை: 535 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5,503 அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாகத் திறந்துவைத்தார்.

cm inaugration
cm inaugration

By

Published : Feb 5, 2021, 12:03 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (பிப். 4) தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்றுவாரியத்தின் சார்பில் சென்னை, வேலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 535 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5,503 அடுக்குமாடி குடியிருப்புகளைத் திறந்துவைத்தார்.

5,503 அடுக்குமாடி குடியிருப்புகளைத் திறந்துவைத்த முதலமைச்சர்
  • தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்றுவாரியத்தின் சார்பில் சென்னை மாவட்டம், சிவலிங்கபுரம் திட்டப் பகுதியில் மூன்று கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 32 அடுக்குமாடி குடியிருப்புகள்,
  • கேசவப்பிள்ளை பூங்கா பகுதி-2 திட்டப் பகுதியில் 139 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1,056 அடுக்குமாடி குடியிருப்புகள்,
  • வடக்கு கிரியப்பா சாலை திட்டப் பகுதியில் 11 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 140 அடுக்குமாடி குடியிருப்புகள்,
  • வாலஸ் தோட்டம் திட்டப் பகுதியில் 12 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 128 அடுக்குமாடி குடியிருப்புகள்,
  • வேலூர் மாவட்டம், கன்னிகாபுரம் திட்டப் பகுதியில் 20 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 224 அடுக்குமாடி குடியிருப்புகள்,
  • கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில், வடசேரி மேற்கு, புளியடி திட்டப்பகுதியில் 12 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 120 அடுக்குமாடி குடியிருப்புகள்,
  • திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், வாகைகுளம் திட்டப் பகுதியில் 21 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 240 அடுக்குமாடி குடியிருப்புகள்,
  • வாகைகுளம் பகுதி-2 திட்டப் பகுதியில் 20 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 240 அடுக்குமாடி குடியிருப்புகள்

என மொத்தம் 535 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5,503 அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி வாயிலாகத் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர். கிர்லோஷ் குமார், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: கல்விக் கட்டணம் குறைப்பு - தமிழ்நாடு அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் நன்றி!

ABOUT THE AUTHOR

...view details