சென்னை: முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து அளிக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கவும், சிகிச்சைகள் அளிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து அரசு மேற்கொண்டு வருகிறது. கோவிட்-19 நோய்த் தொற்று, முதியவர்கள், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்த
நோய், இருதயம் சார்ந்த நோய்கள் போன்ற பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று
தெரியவந்துள்ளது.
இச்சூழலில், தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் 50 ஆண்டுகளாக பிசிஜி தடுப்பு மருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இது உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தியை (Innate Immunity) அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. பிசிஜி தடுப்பு மருந்தை 60 முதல் 95 வயது வரையிலான முதியவர்களுக்கு செலுத்துவதன் மூலம் நோய்வுற்ற விகிதமும், உயிரிழப்பு விகிதமும் (Morbidity & Mortality Rates) குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.