தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மீனவர்கள் விவகாரம்: பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்! - Cm Edapadi Palanisamy letter To Pinarayi Vijayan

கன்னியாகுமரி: கேரளாவில் மீனவர்கள் நுழைவதற்கு அனுமதி வழங்கக் கோரி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Cm Edapadi Palanisamy letter To Pinarayi Vijayan
Cm Edapadi Palanisamy letter To Pinarayi Vijayan

By

Published : Jul 8, 2020, 11:51 PM IST

இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், "கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு சொந்தமான சுமார் 350 இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுகள், 750 பாரம்பரிய படகுகள் தற்போது கேரள மாநிலத்தின் பல்வேறு மீன்பிடி துறைமுகம் மீன் இறங்கும் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

கரோனா தொற்றுறைக் கருத்தில் கொண்டு, நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, சொந்த ஊர்களுக்கு தமிழ்நாடு மீனவர்கள் திரும்பி வந்தனர்.

ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்கள் படகுகளின் பராமரிப்பைக் கவனிக்க கேரளாவுக்குச் செல்ல முடியவில்லை.

அவர்களின் மீன்பிடி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கவும் இல்லை. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரம் மீனவர் குடும்பங்கள் கடந்த மூன்று மாதங்களாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளன.

பல்வேறு மீனவர் சங்கங்கள், கேரள மாநிலத்திற்குள் நுழைவதற்கு இ-பாஸ் ஏற்பாடு செய்ய வேண்டும். தங்களது மீன்பிடி படகுகளை உடனடியாக பராமரிக்க வேண்டும். தடை காலத்திற்குப் பிறகு மீன்பிடிக்க மீண்டும் தொடங்கலாம் என்று தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை கேரள மாநிலத்திற்குள் ஆகஸ்ட் 1 முதல் மீன்பிடித்தலை மீண்டும் தொடங்க அனுமதிப்பதற்கும், நுழைவு பாஸ் வழங்க உரிய அலுவலர்களுக்குத் தேவையான வழிமுறைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பட்டியலின மக்கள் வீடுகள் இடிந்து தரைமட்டம்!

ABOUT THE AUTHOR

...view details