சென்னை: தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே இன்று காலையில் நடந்த வாகன விபத்தில் நெல்லையைச் சேர்ந்த விவசாய கூலிகள் 5 பேர் இறந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருநெல்வேலி மாவட்டம், மணப்படை வீடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விவசாய கூலி வேலைக்காக தனியார் வாகனத்தில் தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரத்தில் உள்ள ஓடையில் விழுந்ததில், கலைச்செல்வன் மனைவி பேச்சியம்மாள், சுடலை மகள் செல்வி, கணேசன் மனைவி மலையழகு, மனோகரின் மனைவி பேச்சியம்மாள், வேலுவின் மனைவி கோமதி ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.