தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் மறைவு - முதலமைச்சர் இரங்கல் - ஸ்டாலின் இரங்கல்

மூத்த பத்திரிகையாளர் வி. அன்பழகன் மறைவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

cm condolence, ஸ்டாலின் இரங்கல்
cm condolence

By

Published : Oct 13, 2021, 6:10 PM IST

சென்னை:இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும், மூத்த பத்திரிகையாளருமான வி.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக மறைவுற்றார் என்ற அதிர்ச்சி தரும் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நக்கீரன், தமிழ் முரசு உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றிய அன்பழகன் மாற்றுக்குரல்களின் முக்கிய முகமாகத் திகழ்ந்தார் என்பதை அனைவரும் அறிவர். மக்கள் செய்தி மையம் என்ற ஊடகத்தைத் தொடங்கிய அவர், அதிகார மையங்களின் தவறுகளை வெளிக்கொண்டுவந்து மக்கள் முன் நிறுத்துவதில் முனைப்புடன் செயலாற்றியவர்; அடக்குமுறைகளை அஞ்சாமல் எதிர்கொண்டவர்.

உண்மையின் பக்கம் நின்று செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க துணிவுடன் செயல்பட்ட அவரது பணி ஊடக உலகில் நிலைத்து நின்று அவரது புகழைப் பேசும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஊடகத் தோழர்கள் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:அதிர்ச்சித் தகவல்: 21 பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை!

ABOUT THE AUTHOR

...view details