தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

டிசம்பரில் 2,000 மினி கிளினிக் தொடக்கம்! - முதலமைச்சர் அறிவிப்பு! - டிசம்பரில் 2,000 மினி கிளினிக் தொடக்கம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்குள் 2,000 மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

announcement
announcement

By

Published : Nov 28, 2020, 2:54 PM IST

தமிழ்நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கு, நாளை மறுநாள் முடிவடையவுள்ள நிலையில், அதனை நீட்டிப்பது, கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று, தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது உரையாற்றிய அவர், ” மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனை படி செயல்பட்டதால் மாநிலத்தில் கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், பணியாளர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.

15,000 மருத்துவப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு, புதிய உயிர் காக்கும் மருந்துகள், முகக்கவசம், பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவை போதிய அளவு கொள்முதல் செய்யப்பட்டதால், மாநிலத்தில் கரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது. ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், தலா ஒரு மருத்துவர், செவிலியர், உதவியாளருடன் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் 2,000 மினி கிளினிக்குகள் தமிழகம் முழுவதும் தொடங்கப்படும்.

டிசம்பரில் 2,000 மினி கிளினிக் தொடக்கம்! - முதலமைச்சர் அறிவிப்பு!

நிவர் புயல் பாதிப்பு குறித்து நேற்று தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் எனத் தெரிவித்துள்ளார். சென்னையின் புறநகர் பகுதிகளான, வேளச்சேரி, மடிப்பாக்கம், தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்குரிய திட்டங்களை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொண்டதால், புயல் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். கரோனா சூழலிலும் தமிழகத்தில் 55 தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி, 40,718 கோடி ரூபாய் முதலீடு கிடைக்கப் பெற்றுள்ளது. இதனால் 74,212 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் “ என்றார்.

இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: அதிகபட்ச கரோனா தொற்றை பதிவுசெய்யும் ஹைடெக் அண்ணா நகர்!

ABOUT THE AUTHOR

...view details