தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண்.110 கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர், "நான்காவது தொழில் புரட்சிக்கான தகவல் தொழில்நுட்பங்களின் மூலம் தமிழ்நாட்டின் மின் ஆளுமையை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதற்காக, வளர்ந்து வரும் தகவல்தொழில் நுட்பங்களில் ஒன்றான நம்பிக்கை இணையம் மூலம் பரிவர்த்தனைகளில் உள்ள உண்மைத் தன்மையினை அறிந்திடும் வகையில் தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் சுமார் ரூ.40.80 கோடி செலவில் நம்பிக்கை இணைய கட்டமைப்பு ஒன்று அமைக்கப்படும்.
'மக்களைத் தேடி அரசு' புதிய திட்டத்தை அறிவித்தார் முதலமைச்சர்
சென்னை: "மக்களைத் தேடி அரசு என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்" என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இத்தொழில்நுட்பத்தில் சேகரிக்கப்படும் தகவல்கள், தரவுகளை மாற்ற இயலாத காரணத்தால், அரசின் தரவுகள் அனைத்தும் பாதுகாப்பாக வைத்திட இயலும். அரசுத் துறையில் பல்வேறு சேவைகளைப் பெற பொதுமக்கள் அத்துறை சார்ந்த அலுவலகங்களுக்குச் சென்று விண்ணப்பித்து பெறுவது மட்டுமல்லாமல், அரசு இ-சேவை மையங்கள், இணையதளம் மற்றும் கைபேசி செயலிகள் மூலம் விண்ணப்பித்து பெற்றுவருகின்றனர்.
தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் மக்கள் எண் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்வாயிலாக, ஒவ்வொரு நபருக்கும் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சட்டப்படியான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் குடிமக்கள் பெட்டகத்திலிருந்து விண்ணப்பிக்காமலேயே குறிப்பறிந்து, தானாகவே வழங்கப்படும். இதனைப் பெற்றிட, தனிநபர் தன்னுடைய கைபேசி எண்ணை பயனாளி குறியீடாகவும், ஒருமுறை கடவுச் சொல்லைப் பயன்படுத்தியும் பெற்றுக் கொள்ளலாம். மக்களைத் தேடி அரசு என்ற இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்" என்று அவர் தெரிவித்தார்.