இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்த, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ், தாராபுரம் வட்டம், மூலனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி, மன்னார்குடி வட்டம், அரவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, திருப்பத்தூர் மாவட்டம், விளாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பாரதி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 16 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த 16 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி! - சென்னை செய்திகள்
சென்னை: பல்வேறு துயர நிகழ்வுகளில் உயிரிழந்த 16 பேரின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்ச ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
eps
இத்துயர நிகழ்வுகளில் உயிரிழந்த 16 நபர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் “ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இலங்கை கடற்படை கைதுசெய்துள்ள 29 மீனவர்களை விடுவிக்க சீமான் வலியுறுத்தல்!