தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தூய்மைப் பணியாளர்களுக்கு இடர்படி: மத்திய, மாநில அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: ஊரக உள்ளாட்சி பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு இடர்படி வழங்க கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம்
நீதிமன்றம்

By

Published : Sep 22, 2020, 2:23 PM IST

தோழர் சட்ட மையத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ”தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2014ஆம் ஆண்டு கொண்டுவந்தது. இந்த திட்டம் வரவேற்பு பெற்றபோதும், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு இடர்படிகள் வழங்குவதில்லை.

தூய்மைப் பணியாளர்கள் கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி தூய்மை செய்யும்போது மரணமடைய அதிக வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை.

தூய்மைப் பணியாளர்களுக்கு தினக்கூலியாக 80 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதால், இடர்படி வழங்க கோரி மத்திய அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் மனு அனுப்பப்பட்டது. இந்த கோரிக்கையை பரிசீலிக்கவும், தேவையான பாதுகாப்பு வசதிகளை வழங்கவும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் ஆணையருக்கு மத்திய அரசு பரிந்துரைத்தது.

ஆனால், இந்த பரிந்துரை மீது தமிழ்நாடு அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தூய்மைப் பணியாளர்களுக்கு இடர்படிகள் வழங்க வேண்டும். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு, மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் அக்டோபர் 16ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details