தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் 5 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், அரசுத் தேர்வுத்துறை இயக்குனர், தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் உள்ளிட்ட இயக்குனர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஏப்ரலில் 5, 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! - பள்ளிக்கல்வித்துறை
சென்னை: "தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து வரும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும் ஏப்ரல் மாதம் பொதுத்தேர்வு நடத்தப்படும்" என பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் அறிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் 5 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களை 3 கிலோ மீட்டர் துாரத்திற்குள் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். 20 மாணவர்கள் இருந்தால் அந்த பள்ளியிலேயே தோ்வு மையம் அமைத்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு குறைந்த மதிப்பெண்கள் பெற்றாலே தேர்ச்சி அளிக்கலாம் உள்ளிட்ட கருத்துகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளன.
தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களை தொடர்ந்து படிப்பதற்கு அனுமதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்ட நிலையில், இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் அடிப்படையில் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் கூறுகையில், "மத்திய அரசின் சட்டத்திருத்தம்படி தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் 5 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் பொதுத்தேர்வு நடத்தப்படும். அந்த தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் மேற்கொண்டு படிப்பது மற்றும் தேர்வு எழுதுவதற்கான கால அவகாசம் அளிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. மாணவர்களுக்கான மதிப்பெண் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்", என்றார்.