சென்னை:தமிழ்நாட்டில் இளநிலை சிவில் நீதிபதிகள் பணிக்கான தேர்வு 2009ஆம் ஆண்டு நடத்தப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்டன. இந்தத் தேர்வில் தேர்ச்சியடைந்து நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்களின் பணி மூப்பு நிர்ணயத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதிகள் சஞ்ஜீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், "பணிமூப்புக்கு இடஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்த, சுழற்சி நடைமுறையை பின்பற்றுவதால் தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்னுக்கு தள்ளப்படுவர்.
எனவே போட்டித்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணிமூப்பை நிர்ணயிக்க வேண்டும். ஒருவேளை இரு விண்ணப்பதாரர்கள், ஒரே மதிப்பெண்களை பெற்றிருந்தால், வயதில் மூத்தவருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.