மாநகராட்சியில் தற்காலிக பணியாளர்கள் முன்னறிவிப்பின்றி வேலையிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சிஐடியு செங்கொடி தலைவர் மகேந்திரன் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் அருகில் சிஐடியு செங்கொடி சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநகராட்சிக்கு எதிராகவும் மாநகராட்சி ஆணையருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த மகேந்திரன், "தற்காலிக பணியாளர்கள் மாநகராட்சில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். மண்டலம் 8இல் பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்கள் கிட்டத்தட்ட 560 நபர்களை முன்னறிவிப்பின்றி பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் செங்கொடி சங்கம் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் போராடி வருகின்றோம். பணி மீண்டும் வழங்கும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.
மாநகராட்சி வயது முதிர்ந்தவர்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை மட்டுமே நாங்கள் பணியிலிருந்து நீக்கியதாக சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆனால் மண்டலம் எட்டில் இருக்கக்கூடிய 561 தூய்மைப் பணியாளர்கள் ஒட்டுமொத்தமாக பணியிலிருந்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். மண்டலம், ஐந்தாம் மண்டலம் நாளிலும் இந்தப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.