தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் - தூய்மைப்பணியாளர்கள்

சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கு தினக்கூலியாக 624 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி செங்கொடி சங்கத்தினர் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
protest

By

Published : Sep 7, 2020, 6:35 PM IST

தூய்மைப் பணியாளர்களுக்கு தினக்கூலியாக 624 ரூபாய் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன், சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரிப்பன் மாளிகையை முற்றுகையிடுவதற்காக இன்று கூடினர்.

ஆனால், காவல் துறை தடுத்ததால் அருகில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலைய வாயில் அருகே சென்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல் துறையினர் அவர்களை கைது செய்து பேருந்தில் அழைத்துச் சென்றனர்.

அப்போது நம்மிடையே பேசிய சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத் தலைவர் மகேந்திரன், " மாநகராட்சி நிர்வாகம் தூய்மைப் பணியாளர்களுக்கு தினக்கூலியாக 624 ரூபாய் வழங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், மாநகராட்சி 379 ரூபாயை மட்டுமே வழங்குகிறது. மேலும், 25 ஆண்டுகளாக பணியாற்றியும் தூய்மைப் பணியாளர்கள் பலர் இன்னும் நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். அவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.

மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

அதேபோல், தனியாரிடம் டெண்டர் வழங்கும் போது, அப்போது எந்த தூய்மைப் பணியாளர்கள் பணியில் இருக்கிறார்களோ அவர்களையே அப்பணியில் அமர்த்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாகனங்கள் பறிமுதல்செய்வதைக் கண்டித்து ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details