சென்னை: ஓலா, ஊபர் உள்ளிட்ட தனியார் ஆட்டோ செயலிகளை தடை செய்ய வேண்டும், தமிழ்நாடு அரசே ஆட்டோ செயலியை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே பல கட்சிகளைச் சேர்ந்த ஆட்டோ சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 500-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களைச் சந்தித்த சிஐடியு மாநில துணைத் தலைவர் மகேந்திரன், " ஆட்டோ மீட்டர் கட்டணத்தை பெட்ரோல், டீசல் விலைக்கேற்றார் போல் மாற்றி அமைக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி இந்த மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைப்பதற்காக குழுவை உடனடியாக அரசு அமைக்க வேண்டும்.