தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெண் பணியாளர்களுக்கு கழிவறை வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை!

பெண் பணியாளர்களுக்கு கழிப்பறை வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

பெண் பணியாளர்களுக்கு கழிவறை வசதி
பெண் பணியாளர்களுக்கு கழிவறை வசதி

By

Published : Oct 26, 2021, 7:07 AM IST

சென்னை:கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “இந்திய அரசு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, ஆராய்ச்சித் துறையின் கண்காணிப்பு நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட முதல்கட்ட மதிப்பீட்டு ஆய்வின் மதிப்பீடு, செயல்முறை அடிப்படையில் கடந்த மார்ச் 2020ஆண்டுடன் முடியும் காலாண்டுக்கான அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

அதன்படி பெண்கள், மாற்றுத்திறனாளி விற்பனையாளர்கள் வேலை செய்யும் நியாயவிலைக் கடைகளில் ஒரு உதவியாளரையோ, கட்டுநரையோ நியமிக்கலாம். இரு நபர் பணிபுரிய தகுதியுள்ள கடைகளில் மட்டுமே மாற்றுத்திறனாளி பணியாளர்கள் பணி அமர்த்தப்பட வேண்டும். ஒரு நபர் மட்டும் பணிபுரிய தகுதியுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு பணியமர்த்தல் கூடாது.

பெண் பணியாளர்கள், ஆண் பணியாளர்களுக்கு இணையாக பணியமர்த்தப்படலாம். எனினும் பணியமர்த்தக் கூடிய நியாயவிலைக் கடைகளில் கழிப்பறை வசதி இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தீபாவளி போனஸ் கேட்டு தையல் தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

ABOUT THE AUTHOR

...view details