தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் சினிமா பாணியில் கொள்ளை சம்பவம் - Cinema style robbery in Chennai

சென்னையில் சினிமா பாணியில் இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்து ஒரு லட்சம் பணம், 69 கிராம் தங்க கட்டி உள்ளிட்டவற்றை பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சினிமா பாணியில் கொள்ளை சம்பவம்
சினிமா பாணியில் கொள்ளை சம்பவம்

By

Published : Jul 25, 2022, 11:20 AM IST

சென்னை திருவல்லிக்கேணி முக்தருனிசா பேகம் தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (41). இவர் திருவல்லிக்கேணியில் ஏ.எம்.எஸ் லாட்ஜ் நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை சாகுல் ஹமீது லாட்ஜிலிருந்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.

ஓ.வி.எம். தெரு மசூதி தெரு சந்திப்பில் சென்று கொண்டிருந்த போது திடீரென முகத்தில் மாஸ்க் அணிந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருசக்கர எட்டி உதைத்து சாகுல் ஹமீதை கீழே தள்ளி உள்ளார். பின்னர் கையில் வைத்திருந்த கத்தியால் சாகுல் ஹமீதை வெட்டிவிட்டு அவரிடமிருந்த 1 லட்சம் பணம், 69 கிராம் தங்க கட்டி, செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு சாகுல் ஹமீது கொண்டு வந்த இருசக்கர வாகனத்தையே திருடி தப்பி சென்றார்.

காயமடைந்த சாகுல் ஹமீதை அங்குள்ள நபர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி இரு நபர்களும் குருவிகளா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: திமுக ஆட்சியின் மதிப்பீட்டிற்கு சான்று - முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details