ரெட் ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் மின்ட் கணேஷ். இவர் கடந்த 22 ஆண்டுகளாக திரைத்துறையில் சண்டைக்கலைஞராக பணியாற்றி வருகிறார். இயக்குநர் ஷங்கரின் அந்நியன், ரஜினியின் சிவாஜி உள்ளிட்ட பல படங்களில் மின்ட் கணேஷ் பணிபுரிந்திருக்கிறார்.
இதனிடையே, கார்த்தி நடித்து வெளியான கைதி திரைப்படத்தில் ஏற்பட்ட பிரச்னையில், அப்படத்திற்கு மாஸ்டராக இருந்த அன்பு மற்றும் அறிவு ஆகிய இரண்டு பேருக்கும் ஆதரவாக, மின்ட் கணேஷ் உள்ளிட்ட 10 ஃபைட்டர்கள் கைதி படத்தில் நடித்து உதவி செய்திருக்கின்றனர். இதையடுத்து, யூனியன் விதிகளை மீறியதாக பத்து பேரையும், ஸ்டண்ட் யூனியன் அவர்களை நீக்கியுள்ளது.
பின்னர், மின்ட் கணேஷ் மற்றும் அவரது மகனை தவிர, மீதமுள்ள எட்டு பேரும் மீண்டும் ஸ்டண்ட் யூனியனில் சேர்க்கப்பட்டுள்ளனர். தங்களையும் மீண்டும் சேர்க்கக்கோரி மின்ட் கணேஷ் கடந்த ஓராண்டாக யூனியன் தலைவர் சுப்ரீம் சுந்தரிடம் புகாரளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், மின்ட் கணேஷிற்கு வரும் பட வாய்ப்புகளையும், சுப்ரீம் சுந்தர் தடுத்து வருவதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.