சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 2022 - 2024ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சென்னையில் நடைபெற்று வருகிறது. வாக்குரிமை பெற்ற 479 உறுப்பினர்களில், பிற்பகல் 2.45 மணி வரை 300 பேர் வாக்களித்துள்ளனர். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 6 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது. இன்று(ஜூன் 19) இரவே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரம் - தயாரிப்பாளர் கே ராஜன்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
தயாரிப்பாளர் கே.ராஜன் தலைமையில் ஒரு அணியும், திருவேங்கடம் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகிறது. தலைவர் பதவிக்கு கே.ராஜன், திருவேங்கடம் ஆகியோரும், செயலாளர் பதவிக்கு கே.காளையப்பன், எஸ்.ஸ்ரீராம், அல்தாப் முகமது (சுயேச்சை) ஆகியோரும் போட்டியிட்டனர். துணைத் தலைவர் பதவிக்கு எஸ்.நந்தகோபால் மற்றும் அனந்தன் போட்டியிட்டனர். பொருளாளர் பதவிக்கு பி.முரளி, எஸ்.ஸ்ரீராம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இணைச்செயலாளர் பதவிக்கு சாய்பாபா மற்றும் டி.ராஜகோபாலன் போட்டியிடுகின்றனர். மேலும் 16 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 31 பேர் போட்டியிடுகின்றனர்.
இதையும் படிங்க: கொடுங்கையூர் விசாரணைக்கைதி மரண வழக்கு: 30 காவலர்களிடம் சிபிசிஐடியினர் விசாரணை