தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இயக்குனர் கைது! - சினிமா இயக்குநர் கைது

சென்னை: கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த திரைப்பட இயக்குனர் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு சினிமா இயக்குநர்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு சினிமா இயக்குநர்

By

Published : Dec 30, 2020, 12:52 PM IST

வியாசர்பாடி அசோக் பில்லர் ஜங்ஷன் வழியாக வாகனத்தில் சிலர் கஞ்சா கடத்துவதாக, வியாசர்பாடி காவல்துறையினர் ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கு வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக அந்த வழியே வந்த ஆட்டோவை மடக்கி காவல்துறையினர் சோதனையிட்டனர். சோதனையில் 11 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவைக் கடத்தி வந்த அம்பத்தூரைச் சேர்ந்த பொன் முருகேசன் (43), பாடியைச் சேர்ந்த மனோகரன்(36), மணிமாறன்( 43), பத்மனாபன் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 11கிலோ கஞ்சா மற்றும் விற்பனைக்குப் பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு சினிமா இயக்குநர்
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட பொன் முருகேசன் சினிமாவில் இயக்குநராகப் பணியாற்றி வருவது தெரியவந்தது. இவர் இயக்கிய மௌனமே காதலாய் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரைப்பட இயக்குநரே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ABOUT THE AUTHOR

...view details