இந்தியாவில் 28 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதனால் ஆண்டுக்கு ஏழு லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அதில் நாற்பத்தி ஐந்தாயிரத்திற்க்கும் மேற்பட்ட பெண்கள் உயிர் இழக்கிறார்கள்.
மார்பக புற்றுநோய் பாதிப்பை எளியமுறையில் தவிர்க்கலாம் என்றும் டிஜிட்டல் மெமோகிராம் கருவியை கொண்டு மிகநுண்ணிய புற்றுநோய்கட்டிகளை கண்டுபிடித்துவிடலாம் என தெரிவிக்கின்றனர். இந்த பாதிப்பு முன்கூட்டியே கண்டுபிடித்துவிட்டால் நூறு சதவிகிதம் முற்றிலும் குணப்படுத்திவிடலாம் ஆகையால் பெண்கள் கூச்சப்படாமல் முன்வந்து மெமோகிராம் பரிசோதனை செய்துகொண்டால் உயிர் இழப்பை தவிர்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.