கடந்த இரு நாள்களாக மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துப்பேசினர். அப்போது சீன அதிபருக்குக் காஞ்சி பட்டுப்புடவை பரிசாக அளிக்கப்பட்டது. பதிலுக்குச் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரதமர் மோடியின் உருவம் பொறித்த சீன பீங்கான் தட்டை மோடிக்குப் பரிசாகக் கொடுத்தார்.
முக மலர்ச்சியுடன் தமிழ் மண்ணிலிருந்து புறப்பட்ட ஜி ஜின்பிங்!
இருநாள் சந்திப்பு முடிவடைந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்பினார்,
Xi Jinping
அதைத்தொடர்ந்து, சீன அதிபர் தனது அதிநவீன ஹாங்கி எல். 5 பாதுகாப்பு கார் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் ஆகியோர் வழியனுப்பிவைத்தனர். தற்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் தனி விமானத்தில் நேபாளம் புறப்பட்டார்.