மலேசியா நாட்டின் தலைநகா் கோலாலம்பூரிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு நள்ளிரவு 12.40 மணிக்கு மலேசியன் ஏா்லைன்ஸ் விமானம் ஒன்று வந்தது.
இந்த விமானத்தில் வந்த பயணிகளுக்கு விமான நிலையத்தில் மத்திய சுகாதாரத்துறையினா் மருத்துவ பரிசோதனை நடத்தினா்.
அப்போது சீனா நாட்டை சோ்ந்த (Liuwijin)லுவிஜின்(46) என்ற ஆண் பயணிக்கு கரோனா நோய்க்கான அறிகுறி இருப்பதை கண்டுப்பிடித்தனா்.
இதையடுத்து அவரை தனிமைப்படுத்தி, பலத்த பாதுகாப்புடன் சிறப்பு தனி ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மலேசியாவிலிருந்து சென்னை வந்த சீன பயணிக்கு கரோனா பாதிப்பு அதோடு சீன நாட்டு தூதரகத்துக்கும் தகவல் கொடுத்தனா். இவா் சீனாவிலிருந்து ஹாங்காங் சென்று அங்கிருந்து சுற்றுலா பயணியாக மலேசியா வழியாக இந்தியா வந்துள்ளாா்.
இதையும் படிங்க:நிர்பயா வழக்கு: மத்திய அரசின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு