தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையின் மூன்று பள்ளிகளுக்கு குழந்தை உரிமைகள் ஆணையம் சம்மன் - ஆர்ஏ புரம் செட்டிநாடு வித்யாஷ்ரமம்

சென்னை: பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான ஆசிரியர்கள், அவர்கள் பணிபுரியும் பள்ளி நிர்வாகத்தினர், புகார் அளித்த மாணவிகள் ஆகியோரை நேரில் ஆஜராகும்படி தமிழ்நாடு குழந்தை உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

பத்மசேஷாத்ரி பள்ளி
சென்னையின் மூன்று பள்ளிகளுக்கு குழந்தை உரிமைகள் ஆணையம் சம்மன்

By

Published : May 29, 2021, 12:05 AM IST

பத்மசேஷாத்ரி பள்ளி பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் குழந்தை உரிமைக்களுக்கான பாதுகாப்பு ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்ததன் விளைவாக, மேலும் சில பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் ஆணையத்தின் மின்னஞ்சலுக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் மூன்று வெவ்வேறு பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் மின்னஞ்சல் வாயிலாக அளித்த இந்தப் புகார்களின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், புகார் அளித்த மாணவிகள் என அனைவருக்கும், மூன்று வெவ்வேறு தேதிகளில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி தாளாளர், சம்மந்தப்பட்ட ஆசிரியர், புகார் கொடுத்த மாணவிகள் என அனைவருக்கும் வரும் ஜூன் 10ஆம் தேதி ஆணையத்தில் ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

ஆர்.ஏ.புரம் செட்டிநாடு வித்யாஷ்ரமம் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களுக்கு ஜூன் 8ஆம் தேதியும், செனாய் நகர் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் வரும் ஜூன் 7ஆம் தேதியும் ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: போக்சோவில் சிக்கிய தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் திடீர் தற்கொலை முயற்சி

ABOUT THE AUTHOR

...view details