தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா பரவல்: தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் பிரதமருடன் ஆலோசனை! - news today

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை செய்தார்.

தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன்
தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன்

By

Published : Apr 23, 2021, 2:54 PM IST

சென்னை:கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசு சார்பாக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்றார்.

தமிழ்நாடு அரசு சார்பில் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, காணொலிக் காட்சி மூலம் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் பிரதமருடன் ஆலோசனை

தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவலை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து தலைமைச் செயலரிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

தமிழ்நாட்டில் நாள்தோறும் நடத்தப்படும் பரிசோதனைகள், காய்ச்சல் முகாம்கள், வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர தமிழ்நாடு அரசு எடுத்து வரும் முயற்சிகளை ராஜீவ் ரஞ்சன் பிரதமர் மோடியிடம் விளக்கினார். மேலும் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகவும், கரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க தமிழ்நாட்டில் மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்கள் அடங்கிய 11 ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதையும் பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும், கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசிகளை அனுப்ப மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடியிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: பிளஸ் 2 செய்முறை தேர்வு நிறைவு

ABOUT THE AUTHOR

...view details