தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை காரணமாக பல்வேறு தடுப்புப் பணிகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கரோனா பாதிப்புத் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், காவல் துறைத் தலைவர் ஜே.கே. திரிபாதி கலந்துகொள்கின்றனர்.
கரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு ஆளுநருடன், தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேலும் தமிழ்நாட்டில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கையாக ஆளுநரிடம் தலைமைச் செயலர் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு ஆளுநருடன், தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை