சென்னை: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்ட இரண்டு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் இன்று (ஜூலை.10) ஆலோசனை மேற்கொண்டனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்தும், அவற்றில் குளறுபடிகள் ஏற்படாத வண்ணம் நெல் கொள்முதல் செய்வது தொடர்பாகவும், நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
நேரடி நெல் கொள்முதல் செய்யும்போது விவசாயிகளுக்கு உரிய விலை தருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிகப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நெல் கொள்முதல் நிலையத்தில் கூடுதல் வசூல்... அலுவலர்கள் விசாரணை