தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அனைத்துக் கட்சி கூட்டத்தில் என்ன பேசினார் ஸ்டாலின்?

ஊரடங்கு தளர்வை பயன்படுத்தி சிலர் விதிகளை மீறி வருவதால், தளர்வில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.

By

Published : May 13, 2021, 9:10 PM IST

Updated : May 13, 2021, 10:30 PM IST

ஸ்டாலின், முக ஸ்டாலின், mk stalin, stalin, அனைத்துக் கட்சி கூட்டம், ஸ்டாலின் உரை, அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் உரை
ஊரடங்கு தளர்வில் மாற்றம் செய்ய வேண்டுமா

சென்னை: தலைமைச் செயலகத்தில் அனைத்து சட்டப்பேரவைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (மே.13) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, "தமிழ்நாட்டில் கரோனா வேகமாகப் பரவிவரும் நிலையில் கரோனா நோய் தொற்று தடுப்பு, நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக நடத்தப்படும் அனைத்து சட்டப்பேரவைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு எனது அழைப்பினை ஏற்று வருகை புரிந்துள்ள உங்கள் அனைவருக்கும், முதற்கண் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வெளிப்படையான ஆலோசனை நடத்தவே இந்தக் கூட்டத்தை கூட்டியிருக்கிறேன். முதலமைச்சராக பொறுப்பேற்கும் முன்பே கரோனா தடுப்பு தொடர்பாக அலுவலர்களிடம் ஆலோசனை வழங்கினேன். நான் முதலமைச்சராக பதவியேற்றவுடன் ஐந்து முக்கிய அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.

அவற்றில், ”கரோனாவால் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக நான்காயிரம் ரூபாய், இரண்டு தவணையாகக் கொடுக்கப்படும்” என்ற அரசாணையும் ஒன்று. அதில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. அத்தோடு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுபவர்களின் சிகிச்சை செலவினை அரசே ஏற்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

முதலமைச்சர் ஸ்டாலின் உரை

கடந்த சில நாள்களாக எடுக்கப்பட்டுள்ள அரசு நடவடிக்கைகள் குறித்து உங்கள் முன் தெரிவிக்க விரும்புகிறேன்.

  • ஆக்ஸிஜன் இருப்பு, படுக்கை வசதி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் விதமாக ’வார் ரூம்’ அமைத்தது.
  • ஆக்ஸிஜன் இருப்பைக் கண்காணிக்க 4 ஐஏஎஸ் அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • கரோனா தொற்றை எதிர்த்து போராடிவரும் முன்கள வீரர்களான தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல், தடுப்பூசி தட்டுப்பாட்டை குறைக்க உலகாளவிய ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது.
  • ஒடிசா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து ஆக்ஸிஜன் கொண்டு வர மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
  • ரெம்டெசிவிர் மருந்து மாநிலம் முழுவதும் பல நகரங்களில் விநியோகம் செய்யப்படுகிறது.
  • படுக்கைகள் தட்டுப்பாட்டை போக்க பல மாவட்டங்களில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பாக சென்னை வர்த்தக மையத்தில் புதிதாக படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • ஆர்டிபிசிஆர் சோதனையை தனியார் மேற்கொள்வதற்கான அனுமதியும், அதன் கட்டணத்தை கண்காணிக்க விலை நிர்ணயக் குழு கூட்டத்தை நடத்தவும் நேற்று (மே 12) ஆணை பிறப்பித்துள்ளேன்.
  • சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளும் அறிவித்துள்ளேன்.
    அனைத்துக் கட்சி கூட்டம்

இவை தவிர முழு ஊரடங்கினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தளர்வுகளை பயன்படுத்தி சிலர் ஊரடங்கு விதிகளை மீறுகின்றனர். எனவே இந்தத் தளர்வுகளை தொடர்ந்து நீட்டிக்க வேண்டுமா அல்லது சில மாற்றங்கள் செய்ய வேண்டுமா என்று உங்கள் ஆலோசனைகளையும், உங்களின் தொகுதிகளின் நிலவரம் குறித்த கருத்துகளையும் தெரிவிக்குமாறு கேட்டுகொள்கிறேன்" என்றார்.

இதையும் படியும்: அனைத்துக் கட்சி கூட்டம் நிறைவு; ஊரடங்கு குறித்து ஆலோசனை

Last Updated : May 13, 2021, 10:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details