தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைதி அச்சத்தை ஏற்படுத்துகிறது'- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் - பழைய ஓய்வூதியத் திட்டம்

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைதி காத்து வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தயாராக உள்ளதாக அதன் தலைவர் அன்பரசு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் அமைதி அச்சத்தை ஏற்படுத்துகிறது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்
முதலமைச்சரின் அமைதி அச்சத்தை ஏற்படுத்துகிறது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

By

Published : Jun 8, 2022, 6:20 AM IST

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் அன்பரசு, திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு செய்துள்ளது. இந்த நிலையில் அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

தொகுப்பூதியம் மதிப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி, சத்துணவு, ஊர்ப்புற, நூலகர், எம்ஆர்பி செவிலியர் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் சட்டப்படியான ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்.

அகவிலைப்படி முடக்கப்பட்ட சரண்டர் விடுப்பு காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 23ம் தேதி கோட்டை நோக்கி பேரணி நடத்த உள்ளோம். இதற்காக தமிழகத்தில் இயல்பு மையங்களில் இருந்து ஜூன் 20ஆம் தேதி பிரச்சாரத்தை தொடங்குகிறோம்.

அதனைத் தொடர்ந்து ஜூலை 2 இரண்டாம் தேதி எஸ்மா டெஸ்மா வில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் பேரை டிஸ்மிஸ் செய்த அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்ட ஆயத்த மாநாடு மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளன. அரசு ஊழியர்களின் பொருளாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராடிய போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எஸ்மா டெஸ்மா வின்போது ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தார்.

அப்போது அரசு ஊழியர்களை போராட்டத்திற்கு தூண்டிவிட்டதாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீதும் டெஸ்மா வழக்கு போடப்பட்டது. அந்த சூழ்நிலையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நியாயப்படுத்தி முரசொலியில் முன்னாள் முதலமைச்சர் தொடர்ந்து கட்டுரைகளை எழுதிவந்தார்.

அரசு ஊழியர்கள் கடந்த 3 ஆண்டுகளாக அகவிலைப்படி பெறாமல் உள்ளனர் அதனை அரசு வழங்க வேண்டும். ஒரு லட்சம் அரசு ஊழியர்களுக்கு மாதம் 10 சதவீதம் மக்களின் வரிப்பணத்திலிருந்து பிடித்தம் செய்து அதற்கு 7 சதவீதம் வட்டியும் அரசு கட்டி வருகிறது.

இந்தத் தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. அதனைத் தவிர்த்து மக்கள் நலத் திட்டங்களுக்கு இந்த தொகையினை பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வந்தால் செயல்படுத்த முடியும். பழைய பென்ஷன் திட்டத்தின் நிலை குறித்து நிதியமைச்சர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்துடன் விவாதிக்க தயாரா.? எனக் கேள்வி எழுப்பினார்.

பின்னர் தொடர்ந்து பேசிய அவர், அரசு ஊழியர்கள் மீது எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்கு எப்பொழுதும் பாசம் வருகிறது. அதுபோன்ற பாசம் தற்போது பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வந்துள்ளது. பழைய பென்ஷன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறத்தேவையில்லை. அவர் அரசியலை அரசு ஊழியர் விஷயத்தில் செய்யாமல் வேறுவிதத்தில் செய்து கொள்ளட்டும்.

எம்எல்ஏ, எம்பிகளுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தில் பென்சன் வழங்கப்படுகிறது அவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை. மேலும் புதிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் பழைய ஓய்வு திட்டத்திற்கான வேறுபாடுகளை குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறும்போது அரசு ஊழியர்களை அவமானப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் முறைகேடுகள் செய்தால் அவர்களுக்கு பென்ஷன் உள்ளிட்ட பலன்கள் நிறுத்தப்படும் எனவும், புதிய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்கள் திருடினாலோ, லஞ்சம் வாங்கினாலும் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் பணப்பலன்கள் நிறுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.

இதுபோன்ற நிதி அமைச்சரின் பேச்சுகளுக்கு முதலமைச்சர் எந்தவித பதிலும் கூறாமல் அமைதி காப்பது தங்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் அமைதியை கலைந்து இன்றைய பேசினாலும் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற தயாராக உள்ளோம்.

மேலும் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமனம் செய்வது லஞ்சம் மற்றும் ஊழலை அதிகரிக்கும் எனவும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது பறிக்கும் எனக் குற்றஞ்சாட்டினார். எனவே சமூகநீதி அடிப்படையில் படித்த இளைஞர்களுக்கு அரசு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கையையும் தங்கள் போராட்டத்தில் இணைத்துக் கொண்டு படித்த இளைஞர்களை ஒன்று திரட்டி போராடுவோம் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க:ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details